இங்கிலாந்துக்கு அகதிகள் வருவதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றும் இங்கிலாந்து அரசு!

0 1463

இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வருபவர்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர் அல்லது ருவாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர் என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு படகுகள் மூலம் 28,000 பேர் அகதிகளாக வந்த நிலையில், கடந்தாண்டு, அந்த எண்ணிக்கை 45,000 ஆக அதிகரித்தது.

அகதிகள் வருவதை தடுத்து நிறுத்தும் சட்ட மசோதா, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டவிரோதமாக வருபவர்கள் மனித உரிமை சட்டங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு, இங்கிலாந்தில் தஞ்சமடைய முடியாது எனவும், வாழ்நாள் முழுவதும் அவர்கள் இங்கிலாந்துக்கு வர தடைவிதிக்கப்படும் என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments