திரிபுராவில் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் மாணிக் சாஹா..!

0 1585

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைநகர் அகர்தலாவிலுள்ள விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மாணிக் சாஹா மற்றும் 8 அமைச்சர்களுக்கு, ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments