பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோவும், இந்த ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோயிலில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதையில் பொதுமக்கள் ஹோலியை கொண்டாடினர்.
Comments