இளம்பெண்ணை காதலித்து 68 லட்சம் மோசடி: போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலமாக மீட்பு!

0 4126

சென்னையில், இளம்பெண்ணை காதலித்து 68 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வந்த இளைஞர், போரூர் ஏரியில் குதித்ததாக கூறப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப்பின் ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த 29 வயதான நிஷாந்த், பள்ளியில் படிக்கும் போதே சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து பல்வேறு காலக்கட்டங்களில் 68 லட்சம் ரூபாய் பெற்றதோடு, வேறொரு தொழிலதிபர் மகளை திருமணம் செய்யும் ஏற்பாடுகளில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, ஏமாந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நிஷாந்தை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் நிஷாந்த், தனது நண்பர்களுக்கு, தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி விட்டு, நண்பரின் காரை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

போரூர் மேம்பாலத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் நிஷாந்த் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கருதி அவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை ஏரியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments