ஈரானில் 5,000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்!
ஈரானில், கடந்த நவம்பர் மாதம் முதல் 5,000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண், நல்லொழுக்க போலீசாரால் காவல்நிலையத்தில் அடித்துகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல், பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவிகள் பலர், பள்ளி வளாகங்களில் வீசிய துர்நாற்றங்களால் வாந்தி, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து தீவிர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பெண் கல்விக்கு எதிரானவர்களால், மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Comments