உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறிய ரஷ்ய டேங்குகள்.!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய டேங்குகள் கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறும் வீடியோ வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் 155வது டேங்க் படைப்பிரிவு உக்ரைனின் வுஹ்லேடர் என்ற நகரை நோக்கிச் சென்றது. அதன் புறநகர் பகுதியில் சிறிய சாலையில் சென்ற டேங்குகள் அடுத்தடுத்து கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறின.
இதற்கு அனுபவமற்ற வீரர்கள் டேங்க்குகளை இயக்குவதே காரணம் என்று கூறப்படும் நிலையில், படையின் மூத்த அதிகாரிகள் வுஹ்லேடர் நகரை நோக்கி செல்வதற்கு மறுப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வுஹ்லேடர் நகரை என்ன விலை கொடுத்தாலும் கைப்பற்ற வேண்டும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
Comments