எகிப்தில் சிரித்த நிலையில் காணப்படும் ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டுபிடிப்பு..!
எகிப்தில் சிரிக்கும் முகம் கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரா கோவிலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தச் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் பண்டைய ரோமானியப் பேரரசின் பிரதிநிதித்துவமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தச் சிலைகள் கிசா பிரமிடுகளில் உள்ள ஸ்பிங்ஸ் சிலைகளை விட சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முகத்தில் உணர்ச்சியற்றுக் காணப்பட்ட ஸ்பிங்ஸ் சிலைகளையே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த நிலையில், சிரித்தபடி கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
Comments