திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக இன்று பதவியேற்கிறார் மாணிக் சாஹா.!

0 1405

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்கிறார். 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.

மாநில கட்சியான திரிபுரா மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் களம் கண்ட பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐ.பி.எஃப்.டி ஓரிடத்திலும் வென்றன.

இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், மாணிக் சாஹா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அகர்தலாவில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments