மெக்சிகோவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களில் இருவர் சடலமாக மீட்பு!

0 1564

மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா எல்லையை ஒட்டி அமைந்துள்ள டமாலிபஸ் மாகாணத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த 3 ஆண்களும், ஒரு பெண்ணும் காரில் மருந்து வாங்க சென்றுள்ளனர்.

காரின் மீது துப்பாக்கியால் சுட்ட மர்மகும்பல், அவர்களை வேறொரு காருக்கு மாற்றி கடத்தி சென்று போக்கு காட்டியது.

இந்நிலையில், அமெரிக்க - மெக்சிகோ அதிகாரிகள் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், மாடமோரோஸ் நகரிலுள்ள ஒரு வீட்டிலிருந்து கடத்தப்பட்ட நால்வரும் மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments