இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஐ.எம்.எப் முடிவு..!
இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை கோரிய கடனுதவி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், வரும் 20ம் தேதி ஐ.எம்.எப் வாரியக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இலங்கைக்கு கடனுதவிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவைப் போல் சீனாவும் இலங்கைக்கு கடனுதவி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்டவை போதிய அளவு கிடைக்காமல் கடந்த 6 மாதங்களாக ஐஎம்எப் நிதியுதவிக்காக இலங்கை கடுமையாகப் போராடி வருகிறது.
Comments