சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி 3 காட்டு யானைகள் பலி..!

0 1274

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சட்டவிரோதமாக தனது விளைநிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

அந்த வழியாக இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடிவந்த காட்டு யானைக் கூட்டம் மின்வேலியை மிதித்துச் செல்ல முயன்றது. இதில், இரண்டு பெண் யானை உட்பட 3 காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

இது தொடர்பாக விவசாயி முருகேசன் என்பவரை கைதுசெய்து பாலக்கோடு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தாயை இழந்து செய்வதறியாது நின்ற  2 குட்டி யானைகளும் உயிரிழந்த யானைகளை சுற்றிச் சுற்றி வந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments