இந்தியா-ரஷ்யா வர்த்தக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை.. இரு தரப்பும் இணைந்து செயல்படுவதாக அறிக்கை..!
இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகத்தில் உள்ள பற்றாக்குறை மற்றும் ஒத்துழைப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான ஆணையத்தின் மெய்நிகர் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.
இந்தியா-ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் முழு திறனையும் திறக்க, வர்த்தக பற்றாக்குறை மற்றும் சந்தை அணுகல் சிக்கல்களை நிவர்த்தி செய்வதன் மூலம் இருதரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்வதாக வழிகாட்டல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments