பாலியல் கொடுமைகள் குறித்து பேச பெண்கள் முன்வர வேண்டும் - குஷ்பூ

0 1605

தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து மவுனம் காக்காமல், சமூகத்தில் பேச பெண்கள் முன்வர வேண்டும் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலியல் ரீதியில் 8 வயது முதல் 15 வயது வரை தனக்கு தனது தந்தை கொடுமை இழைத்ததாக குஷ்பூ தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அந்த கருத்துக்காக தாம் வெட்கப்படவில்லை என்றும், அதில் ஈடுபட்டோர்தான் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதுகுறித்து பேச வேண்டும் என பல ஆண்டுகளாக தாம் நினைத்து வந்ததாகவும் குஷ்பூ தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments