கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அண்டை வீட்டுச் சுவர் ஏறி தப்பினார் இம்ரான்கான்

0 1982

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க பக்கத்து வீட்டு சுவர் குதித்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத் காவல்துறையினர் இம்ரான்கானைக் கைது செய்ய லாகூர் சென்றதாகவும்,அப்போது அவர் தனது வீட்டுச்சுவரைத் தாண்டி அண்டை வீட்டுக்குள் புகுந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

தனக்கு அன்பளிப்பாக வந்த விலை உயர்ந்த பொருட்களை விற்று பணம் சம்பாதித்ததாக இம்ரான்கான் மீது வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments