மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, மனிதரின் வாழ்க்கை, எதிர்காலம் - முதலமைச்சர்
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பழவகைகள் மற்றும் காய்கறி விவசாயமும், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, எனவே விரைந்து பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், இரண்டாவது நாளாக தேனி, திண்டுக்கல் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களை கள ஆய்வு செய்ய அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெயிலில் காத்திருந்த மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Comments