சென்னை ஐஐடி சார்பில் மின்னணு அமைப்பியல் துறையில் 4 ஆண்டுகால பட்டப்படிப்பை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய கல்வி அமைச்சர்

0 1769

சென்னை ஐஐடி சார்பில் மின்னணு அமைப்பியல் துறையில் 4 ஆண்டுகால இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

12-ம் வகுப்பில்  கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்ற அனைவரும் வயது வேறுபாடின்றி இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் நிலையில், ஆய்வகங்களை பயன்படுத்துவதற்காக ஒரு கல்வி ஆண்டில் இரண்டு வாரங்கள் ஐஐடிக்கு மாணவர்கள் வரவழைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு 4 வாரங்கள் ஆன்லைன் மூலம் மின்னணு அமைப்பியல் குறித்த அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு தகுதித் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைவரும் இதில் சேர்ந்து  படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments