மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதிகளைப் பெற வேண்டும் என்பதில் அரசு கவனம் - பிரதமர் மோடி

0 1587

மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதிகளை பெறும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதார மையங்கள் கட்டமைக்கப்படுவதாகவும், அம்மையங்களில் இதயம் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவற்றை பரிசோதிக்கும் வசதிகளும் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்றார்.

அதில் உரையாற்றிய அவர், அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து செயலாற்றி வருவதாக கூறினார்.

மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்  ஏழை எளிய நோயாளிகளின் 80 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments