பட்டினச்சேரியில் எண்ணெய் கசிவு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்

0 1811

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் எண்ணெய் கசிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  பட்டினச்சேரி மீனவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த ஆட்சியர், மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை குழாயில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடக்கூடாது என சிபிசிஎல் ஆலை நிர்வாகத்திற்கு கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments