டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

0 1459

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாவட்டம் தோறும் துணைமின் நிலையங்கள் வாரியாக குரூப் ஒன்று, குரூப் இரண்டு என பிரிக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்படவிருக்கிறது.

அதன்படி இரண்டு பிரிவுகளுக்குமே காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இரவு நேரத்தில் Group 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை ஆறு மணி வரையிலும் Group 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் group 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து மூணு மணி வரையிலும் Group 2 பகுதிக்கு காலை 9:30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளுக்குமே இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments