திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணி முடிந்த நிலையில், இன்று முதல் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

0 1382

கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணி முடிந்த நிலையில், இன்று முதல் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ரசாயன கலவை பூசுதல் உள்ளிட்ட பணிகள், கடந்த ஜூன் மாதம் முதல், ஒரு கோடி ரூபாய் செலவில் தொடங்கி நடைபெற்றது.

புதுப்பொலிவுடன் காணப்படும் சிலையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு இன்று முதல் படகு போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments