நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது விலா எலும்பில் காயம்.. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என தகவல்..!

0 1579
நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது விலா எலும்பில் காயம்.. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என தகவல்..!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பின்போது காயமடைந்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்துவரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கும்போது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், உடல் அசைவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், இயல்பு நிலைக்கு திரும்ப ஒருசில வாரங்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments