ஆதிகேசவப் பெருமாள் கோயில் சாமி சிலையின் 2 கைவிரல்கள் மாயம் - காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பஞ்சலோக பெருமாள் சிலையின் 2 கைவிரல்கள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாரம் கிராமத்தில் உள்ள கோயிலில் தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கோயிலில் இருந்த பஞ்சலோக சிலையின் ஒரு விரல் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது இரண்டாவது விரலும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஒலக்கூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments