திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது..!

0 1506
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது..!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்டு பிடிபட்ட  நபரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 12ம் தேதி மர்ம நபர்கள் 4 ஏடிஎம் மையங்களில் நுழைந்து ஏ.டி.எம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து சுமார் 75 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட நிஜாமுதீன் என்பவரை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கடந்த 2ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments