மேலும் இரு கட்சிகள் ஆதரவு.. மேகாலயாவில் கான்ராட் சர்மா ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 45ஆக உயர்வு..!
மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சர்மாவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
60 இடங்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் 26ல் வென்றுள்ள தேசிய மக்கள் கட்சிக்கு தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட பாஜக மற்றும் எச்எஸ்பிடிபி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதேபோல் சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் 11 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், இரு இடங்களில் வெற்றி பெற்ற பிடிஎப் கட்சியும் நேற்று தனது ஆதரவை அளித்தன. இதன் மூலம் சட்டப்பேரவையில் கான்ராட் சர்மா ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
Comments