துருக்கியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்பு..!

0 1592
துருக்கியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்பு..!

துருக்கியில் கடந்த மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

துருக்கியில் கடந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 45 ஆயிரம் பேர் பலியாகினர்.

இதில் சான்லியுர்பா நகரில் சாலையோரம் இருந்த கட்டிடம் நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்திருந்த நிலையில், அதிலிருந்தோர் வெளியேற்றப்பட்டு, இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று திடீர் என அக்கட்டிடம் இடிந்து விழுந்தது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments