"அடுத்த தலைமுறை தலைவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்..." குடியரசு கட்சி மாநாட்டில், டிரம்பின் முதுமை குறித்து நிக்கி ஹாலே மறைமுக விமர்சனம்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிக்கி ஹாலே, அடுத்த தலைமுறை தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு கட்சி பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டது, முன்னாள் அதிபர் டிரம்பின் முதுமையை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
76 வயதாகும் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதே கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலேயும், விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளனர்.
75 வயதை தாண்டும் அரசியல்வாதிகளுக்குத் திறனாய்வு தேர்வு நடத்துமாறு அண்மையில் நிக்கி ஹாலே பேசியதும் டிரம்பை விமர்சிப்பதாகவே பார்க்கப்பட்டது. இருந்தபோதும், குடியரசு கட்சி பிரமுகர்களிடையே டிரம்பிற்கே அதிக செல்வாக்கு உள்ளது.
Comments