பாதுகாப்பு அமைச்சக ரகசிய ஆவணங்களை திருடியதாக இளைஞர் கைது..

0 1633

ர்நாடகாவிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான அலுவலகம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இளைஞர் ஒருவர், அங்குள்ள ரகசிய ஆவணங்களை செல்போனில் புகைப்படங்களாக எடுத்து வெளிநாட்டு ஏஜன்சிக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓசூர் அடுத்த பைரகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற அந்த இளைஞர், பொறியியல் முடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் உதயகுமார்.

இந்த நிலையில், அவர் பணியாற்றிய அலுவலகத்தின் இணைய சர்வரை ஹேக் செய்யும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. அது குறித்து ஆய்வு செய்ததில் அங்கிருந்த சில ரகசிய ஆவணங்கள் வெளிநபர்களின் கைகளுக்குச் சென்றிருப்பது தெரியவந்தாகவும் சொல்லப்படுகிறது.

தீவிர விசாரணையில் உதயகுமாரின் வாட்சப் எண்ணில் இருந்து அவை அனுப்பப்பட்டதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து ஓசூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments