சிவகங்கையில் செண்பகம்பேட்டை கிராமத்தில் மீன்பிடி திருவிழா... விரா, கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்களை அள்ளி சென்ற மக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான ஊத்தா கூடை,கச்சா, அரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
செண்பகம்பேட்டை கிராம கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் இரணியூர், நாகப்பன்பட்டி, கீழசெவல்பட்டி, விராமதி அம்மாபட்டி, வேலங்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
விரா, கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்களை கிராம மக்கள் அள்ளிச் சென்றனர்.
Comments