ஆவடி அருகே வீட்டிற்குள் புகுந்து மனைவியின் கண்முன்னே ரவுடி வெட்டி கொலை

0 3539

சென்னை, ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கண்ணெதிரே ரவுடியை வெட்டி கொலை செய்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பொத்தூர் ஆர்.கே.ஜி. வள்ளியம்மை நகரைச் சேர்ந்த பெயிண்டர் யோகேஸ்வரன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்  கொண்டிருந்தபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டியதையடுத்து, அவரது மனைவி ரம்யா கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து மர்மக்கும்பல் தப்பிய நிலையில், கழுத்து, முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டுப்பட்ட யோகேஸ்வரன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் யோகேஸ்வரன் கடந்த 2016ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சுறா என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று 2019ல் வெளியே வந்தது தெரியவந்துள்ளது.

சுறாவின் கொலைக்கு பழிவாங்க இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments