வாரணாசி மணிகர்னிகா காட் பகுதியில் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

0 1388

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட் பகுதியில் திரண்ட ஏராளமானோர் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாடினர்.

வருகின்ற 8-ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.

மணிகர்னிகா காட் பகுதியில் சாம்பலை வைத்து விளையாடும் ஹோலி நாடு முழுவதும் பிரபலமானது.

இங்கு ஹோலி பண்டிகை கொண்டாடவும், அதனை பார்ப்பதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர். இதேபோல் மதுராவில் உள்ள விருந்தாவனத்தில் வெளிநாட்டினர்கள் ஹோலி கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments