உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய சரக்குக் கப்பலில் கோதுமை மூட்டைகளை அனுப்பியது ரஷ்யா..!
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சம் மற்றும் தட்டுப்பாடு 40 சதவீதமாக மாறிவிட்ட நிலையில் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குளோபல் மார்க்கட்டிங் சிஸ்டம் நிறுவனத்தின் எம்.வி.லீலா சென்னை என்ற சரக்குக் கப்பல் ரஷ்யா அனுப்பிய கோதுமை மூட்டைகளுடன் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை அடைந்துள்ளது.
சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகளை பாகிஸ்தானுக்கு இந்தியாவின் உதவியுடன் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.லிபரியன் கொடியோடு கோதுமை மூட்டைகளை ரஷ்யாவின் நோவோரோஸிஸ்க் துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 1ம் தேதி இந்த சரக்குக் கப்பல் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் இது போல் மேலும் 9 கப்பல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
Comments