நல்லூர் கண்மாய் மடை திறந்துவிடப்பட்டதால் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம்
மதுரை மாவட்டம் நல்லூரில், கண்மாய் மடை திறந்துவிடப்பட்டதால் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இக்கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக நல்லூர் கண்மாய் விளங்கும் நிலையில், அதனை குத்தகைக்கு எடுத்த பிரமுகர்கள், மீன் பிடிப்பதற்காக இரவு பகல் பாராது மடைகளை திறந்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் நெல், வாழை, மல்லிப்பூ உள்ளிட்டவை பயிரிடப்பட்ட விளைநிலங்களில் முழங்காலளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக இது போன்று தண்ணீர் திறந்து விடப்படுவதால், நகைகளை அடகு வைத்து செலவு செய்து பயிரிட்ட பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், இது தொடர்பாக புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
Comments