கோயம்புத்தூரில் ரயில்வே மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் அபராதத்துடன் தள்ளுபடி!
கோயம்புத்தூரில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளையும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு சாலையில் உள்ள லெவல் கிராசிங்கை மாற்றி, ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டத்தை எதிர்த்து, அப்பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி. பள்ளி மற்றும் ஸ்ரீ மீனாட்சி அண்ட் கோ நிறுவனம் தரப்பில் 3 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனுதாரர்கள், தங்கள் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையைதான் குறை கூறுவார்கள் என கூறிய நீதிபதி, தனிப்பட்ட நோக்குடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.
Comments