நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள ஆச்சக்கரை, மரவக்கண்டி வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு செடிகள், கொடிகள் கருகி காட்டுத் தீ பற்றியுள்ளது. காற்றின் காரணமாக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி கொழுந்துவிட்டு எரியும் நிலையில், வனத்துறையினரும் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுத் தீயால் யூகலிப்டஸ் மரங்கள், மூலிகை தாவரங்கள், செடிகள், கொடிகள் தீக்கிரையானதோடு, இது முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments