தேனி குரங்கணி பகுதியில் 3 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ.. அரிய வகை மரங்கள், வன உயிரினங்கள் அழியும் நிலை!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், கடும் வெயில் மற்றும் காற்றின் காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது.
3 தினங்களாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் காட்டுத் தீ எரிந்து வருவதால் அரிய வகை மரங்கள் மற்றும் வன உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தீ பரவுவதால் வனவிலங்குகள் உயிர்பிழைக்க மலைக் கிராமங்களில் நுழையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து காட்டுத் தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், கோடைக்காலம் தொடங்கும் முன்பாக வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் மலைப்பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழிவை சந்திக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments