ரஷ்யாவில் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை!

0 2338

ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் விஞ்ஞானி ஆன்ட்ரி போடிகோ பெல்டால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்யாவில் கொரோனா பரவல் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்,  கடந்த 2020ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த 18 விஞ்ஞானிகளில் 47 வயதான வைராலஜிஸ்டான ஆன்ட்ரி போடிகோவும் ஒருவர் ஆவார்.

அவருக்கு கடந்த 2021ம் ஆண்டில் அதிபர் புதின், ரஸ்யாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான Order of Merit for the Fatherland விருது அளித்து கவுரவித்தார். மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த வியாழக்கிழமை  மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விசாரணையில்,  அவர் இருதரப்பு தகராறில் பெல்டால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து, 29 வயது இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து ரஷ்ய போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments