பெண் நண்பரின் கணவரை கடத்தி தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடிப்பு.. 2 பேர் மீது வழக்குப்பதிவு!

0 2347

திருப்பதியில் பெண் நண்பரின் கணவரை கடத்தி தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்து, அவமானப்படுத்தியது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரகிரியை சேர்ந்த அப்பாராவ் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனை அறிந்த பெண்ணின் கணவர், அப்பாராவின் புகைப்படத்தில் RIP என குறிப்பட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை பார்த்த அப்பாராவ், பெங்களூருவில் வேலை செய்துவந்த தனது பெண் நண்பரின் கணவரை, நண்பர் ஒருவருடன் சேர்ந்து சந்திரகிரிக்கு கடத்தி வந்துள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று அவரது தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்ததுடன், இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அப்பாராவ் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments