கரும்பாச்சி கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா.. கட்லா, குறவை மீன்களை ஆர்வமுடன் பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்..!
மதுரை மாவட்டம் செம்பினிபட்டியில் உள்ள கரும்பாச்சி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
விவசாயம் செழிக்க வேண்டியும், அனைவரும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கிலும் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இத்திருவிழாவில் கீழவளவு, கொங்கம்பட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
வலையில் சிக்கிய கட்லா, ரோகு, குறவை, விரால் உள்ளிட்ட மீன்களை இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர்.
Comments