திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி திருவிழா.. ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் வீதி வழியாகவும் தேர் உற்சவத்தை நடத்த உத்தரவு..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் தேர் உற்சவத்தை படவேட்டம்மன் கோவில் வீதி வழியாகவும் நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இக்கோவிலில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய மாசி திருவிழா, வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோவிலின் தேர் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் இன மக்கள் அதிகம் வசிக்கும் படவேட்டம்மன் கோவில் வீதியில் செல்வதில்லை என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், அந்த தெரு வழியாக தேர் செல்ல தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Comments