போலி ஐ.எஸ்.ஐ முத்திரை.. அதிரடி ரெய்டு.. 5,000க்கும் மேற்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் பறிமுதல்..!
சென்னையில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரையை பயன்படுத்தியதாக பல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டீலர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்ட இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெல்டட் பைப்புகளை பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் வெல்டட் குழாய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலியான ஐ.எஸ்.ஐ முத்திரை பதிக்கப்பட்டிருந்த குழாய்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், டீலர்களுக்கு 2 வருட சிறை தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Comments