கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு.. கருப்பான கடல் நீர்.. பாதுகாப்பு ஊழியரை கடலில் தள்ளினர்..!

0 3045

நாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து வருவதால், பாதிப்புக்குள்ளான மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.பி சி.எல் நிறுவன பாதுகாப்பு ஊழியரை தாக்கி கடலுக்குள் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கப்பல்களுக்கு எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் இருந்து சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சாமந்தான்பேட்டை வழியாக பட்டினச்சேரி மீனவக் கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலைத்திற்கு எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் நேற்று இரவு கடலில் கலந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் நெடி, வாயு ஆகியவை கண் எரிச்சல், மூச்சுத் திணறலை ஏற்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் சாமந்தான் பேட்டை மீனவ கிராமம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் கடல் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கடல் நீர் மாசு ஏற்பட்டு மீன்கள், நண்டுகள் உயிரிழந்து வருகின்றன.

குழாய் உடைப்பு குறித்து தகவலறிந்த சென்னை பெட்ரோலியக் கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் குழாய் உடைப்பு இந்த இடத்தில் பார்வையிட்டு வருகின்றனர்.
அதேசயம் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீனவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெட்ரோலியம் கழகம் இந்த குழாய் அமைத்தபோது, பட்டினச்சேரி மீனவக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளித்த நிலையில் குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்பட்டு வருவதையடுத்து கிராமத்தில் அவரசக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மீனவர் கிராம மக்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் உடனடியாக இங்கு உள்ள குழாயினை அகற்றி விட வேண்டும் எனவும் அதுவரை தங்களது பேர நிறுத்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சார்லி 435 மற்றும் 436 ஆகிய இரண்டு கப்பல்கள் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு எண்ணெய் படர்ந்துள்ளது என்பதை கண்காணித்து வரும் அவர்கள் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் அங்கு வந்த சிபிசிஎல் சேஃப்டி அலுவலர் கூகுள் என்பவரை கச்சா எண்ணெய் வெளியேறும் கடற்கரையில் மீனவர்கள் தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால பதற்றம் ஏற்பட்டது

அங்கு குழாயில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்திய மீனவர்கள், குழாய் இப்பகுதியில் இருக்கக் கூடாது அதை நிரந்தரமாக வேறு இடத்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments