தன்னிடம் 50 டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கியது-அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் சர்ச்சை பேச்சு

0 4036

30 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிடம் 50 டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கியதாகவும், பணம் பெற்று விருது வழங்கும் மோசடி வெளிநாடுகளில் இருந்து இங்கும் வந்துவிட்டதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் தொழில் நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இணைந்து நடத்தும் 2 நாள் பயிலரங்கம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது தாய் மொழியில் கல்வி கற்காமல் இருப்பது தான் எனவும், தாய் மொழியில் கல்வி கற்றால்தான் புதிய சிந்தனைகள் தோன்றும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments