சுற்றுலா துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல நீண்ட காலத் திட்டம் தேவை -பிரதமர் மோடி
இந்தியாவில் சுற்றுலா துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல நீண்ட காலத் திட்டம் தேவைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான Developing Tourism Mission நிகழ்ச்சியில் காணொலி மூலம் இன்று உரையாற்றிய அவர், சுற்றுலா என்றதும் பேன்சி வார்த்தையாகவும், பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் சிலர் நினைப்பதாகவும், ஆனால் பண்டைய காலந்தொட்டே இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக சுற்றுலா உள்ளது என்றும், ஆதலால் நமது நாட்டில் சுற்றுலா துறையில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சுற்றுலா தலங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில், கடைக்கோடி இடங்கள் மற்றும் கிராமங்கள் அருகே உள்ள சுற்றுலா இடங்களில் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள், பிற வர்த்தக தொழில்களை ஏற்படுத்தும் பணிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Comments