மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா
மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க கான்ராட் சங்மா உரிமை கோரியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்கள், எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 26 தொகுதிகளில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சிக்கு 2 உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆதரவு அளிப்பதாக கடிதம் அளித்துள்ளது.
இதேபோல் மேலும் சில கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சில்லாங்கில் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சங்மா இன்று அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்மா, மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவும், மேலும் சில கட்சிகளும் ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்தார். புதிதாக ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்கள் பலம் தனக்கு இருப்பதாகவும் சங்மா கூறினார்.
Comments