ஹாங்காங்கில் புதிதாக கட்டப்பட்டு வரும் வானளாவிய கட்டிடத்தில் திடீர் தீ விபத்து..!

0 1509

ஹாங்காங்கில் சிம் ஷா சுய் பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் வானளாவிய கட்டிடத்தில் மேல் தளங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பற்றி எரிந்த கட்டுமான தளத்தில் இருந்து விழுந்த பொருட்களால், அருகிலுள்ள கட்டிடங்களும் சிறிய அளவில் தீ விபத்து நேரிட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர். உடனடியாக அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments