விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு
விரைவு நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிர்ரன் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர்,விரைவு நீதிமன்றங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை அதிகரிக்க குற்றவியல் நடைமுறை சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் விசாரணை அமைப்புகளையும், தடயவியல் ஆய்வகங்களையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விரைவில் நடக்க உள்ள தலைமை நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் மாநாட்டில் இதுபற்றி விவாதிக்க தனி அமர்வு நடத்த வேண்டும் என்று கூறிய அவர், அரசும், நீதித்துறையும் இணைந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
Comments