50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கக்கட்டிகள் விற்க முயற்சி-தட்டித்தூக்கிய போலீசார்

0 1623

தெலுங்கானா மாநிலத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி விற்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கான மாநிலம், ரெங்காரெட்டி பகுதியில் போலீசார், சுங்கத்துறை அதிகாரிகளுடன் கண்காணிப்பில் ஈடுபட்ட போது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 தங்கக் கட்டிகளை விற்க முயன்ற மோயித் பாஷா, அமீர்கான், முகமது அர்சத் ஆகிய மூன்று பேர் சிக்கினர்.

அவர்களிடமிருந்து 6 தங்கக்கட்டிகள், பாஸ்போர்ட்டுகள், இருசக்கரவாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஹைதராபாத், சம்சாபாத் விமான நிலையம் வழியாக தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments