கால்நடை பண்ணைத் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.4.81 கோடி மோசடி.. தந்தை மற்றும் மகன் கைது!
சென்னை அருகே கால்நடை பண்ணை தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி 4 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருமுல்லைவாயல் காட்டூர் கிராமத்தில் இயங்கிவந்த ஓசன் கிரீன்ஸ் லீகசி மேனேஜ்மென்ட் நிறுவன இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட 4 பேர் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் கறவை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி நம்பவைத்து சுமார் 5 கோடியே 75 லட்ச ரூபாய் பெற்று பல்வேறு முறைகேடுகள் செய்து பணமோசடி செய்தததாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், வழக்குப்பதிந்த போலீசார், சுந்தரராஜன் அவரது மகன் மகேஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Comments