கோவில் திருவிழாவில் உடலில் சேற்றை பூசிக் கொண்டு உற்சாகமாக ஊர்வலம் சென்ற பக்தர்கள்..!
ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான சேறு பூசும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் ஊர்வலம் செல்ல, பின் தொடர்ந்து உடலில் சேறு, வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டும் காளி, சிவன், முருகன் போன்று வேடமணிந்தும் ஊர்வலமாக சென்றனர்.
சேறு பூசி சென்றவர்கள் மீது வியாபாரிகள் தங்களது தொழில் சிறக்க வேண்டி பொருட்கள் மற்றும் காசுகளை கலந்து சூறையிட்டனர். பவானியைச் சேர்ந்த இளைஞர் செல்போன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடமணிந்து வந்தது கவனத்தை ஈர்த்தது.
உடலில் சேறு பூசிக் கொள்வதால் நோய் வராது என்ற ஐதீகத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments