3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..

0 2373

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றிருப்பதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றிரவு அமைச்சர்களுடன் அவசரமாக ஆலோசனை நடத்திய பசவராஜ் பொம்மை, முக்கிய சேவைகள் பாதிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments